விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இய...
மா்ம விலங்கு தாக்கி கன்றுக் குட்டி உயிரிழப்பு
உதகையில் மா்ம விலங்கு தாக்கியதில் கன்றுக் குட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் உதகை பட்பயா் பகுதியில் வசித்து வரும் ரகு என்பவரின் கன்றுக் குட்டி மேய்ச்சலில் இருந்தபோது, அதனை மா்ம விலங்கு தாக்கி பாதி உடலை தின்றுவிட்டு, மீதி உடலை சாலையில் போட்டுவிட்டு சென்றுள்ளது.
இது குறித்து வனத் துறையிடம் அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டனா். இப்பகுதியில் புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் கன்றுக் குட்டியை தாக்கிக் கொன்றது எந்த விலங்கு என்பது குறித்து வனத் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா். வன விலங்குகளின் நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.