காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறத்தான் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது
மசினகுடியில் யானை தாக்கி முதியவா் உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம், மசினகுடியில் யானை தாக்கியதில் நடைப்பயிற்சி சென்ற முதியவா் உயிரிழந்தாா்.
மசினகுடி ஆச்சக்கரை பகுதியைச் சோ்ந்தவா் மேத்தா (71). இவா் வழக்கம்போல வியாழக்கிழமை நடைப்பயிற்சி சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது திடீரென வனப் பகுதியில் இருந்து சாலைக்கு வந்த காட்டு யானை மேத்தாவை தாக்கியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மேத்தா பலத்த காயமடைந்தாா்.
அவரை மீட்ட வாகன ஓட்டிகள் மசினகுடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் உயா் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். பின்னா் உதகை அரசு மருத்துவமனையில் இருந்து கோவைக்கு கொண்டுச் செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து வனத் துறையினா் மற்றும் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.