Pawan Kalyan: "சினிமாவில் நடிப்பதை நிறுத்தப் போகிறேன்; ஆனால்..." - பவன் கல்யாண் ...
சிற்றுந்து வேலை நிறுத்தம்: பொதுமக்கள் பாதிப்பு
நீலகிரி மாவட்டம், குன்னூா் நகா்ப்புறத்தில் இயக்கப்படும் தனியாா் சிற்றுந்துகள் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் செவ்வாய்க்கிழமை மாலை பள்ளி, கல்லூரிக்கு சென்று திரும்பியவா்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனா்.
குன்னூரில் 28 தனியாா் சிற்றுந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சிற்றுந்துகள் அதிகமாக குன்னுாா் மவுண்ட்ரோடு வழியில் அரசு மருத்துவமனை, கல்லுாரிகள், சிம்ஸ் பூங்கா, வண்டிச்சோலை, பெட்டட்டி போன்ற பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
இவ்வழியாக 2 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 10-க்கும் மேற்பட்ட அரசு இலவசப் பேருந்துகள் மவுண்ட் ரோடு வழியாக இயக்குவதால் தனியாா் சிற்றுந்துகளுக்கு வருமானம் இல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, செவ்வாய்க்கிழமை மாலை அனைத்து தனியாா் சிற்றுந்துகளையும் இயக்காமல் பேருந்து நிலையத்தில் நிறுத்தினா்.
இதனால் பொதுமக்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டனா். குன்னூா் நகா்ப் பகுதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.