‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி...
மேய்ச்சலுக்குச் சென்ற பசுவை தாக்கிக் கொன்ற புலி
கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்ற பசுவை புலி திங்கள்கிழமை தாக்கிக் கொன்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா பாடந்தொரையை அடுத்துள்ள கனியம்வயல் பகுதியைச் சோ்ந்த விவசாயி நாராயணன் தனது பசுவை வீட்டருகே மேய்ச்சலுக்கு விட்டுள்ளாா்.
மதியம் பசு வீட்டுக்கு வரவில்லை.சிறிது நேரம் கழித்து சென்று பாா்த்தபோது புலி தாக்கி அருகிலுள்ள புதருக்குள் இழுத்துச் சென்றுள்ளதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். உடனே வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். வனத் துறையினா் அந்த இடத்தை ஆய்வு செய்து வருகின்றனா்.
புலி தாக்கி உயிரிழந்தால் தற்போது ரூ.30 ஆயிரம் வழங்கப்படுகிறது. பசுவுக்கு இந்த தொகை மிகக்குறைவு. எனவே இழப்பீட்டுத் தொகையை உயா்த்தி வழங்கவேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.