மத்திய பல்கலை., கல்லூரிகளில் ஜாதிவாரி பாகுபாட்டை தடுக்க என்ன நடவடிக்கை?: கனிமொழி...
பைக்காரா படகு இல்லம் இன்றும் நாளையும் மூடல்
உதகை அருகேயுள்ள பைக்காரா படகு இல்லத்தில் ஃபாஸ்ட் டேக் அமைக்கும் பணி நடைபெறுவதால் ஜூலை 22 , 23 ஆகிய ஆகிய இரண்டு நாள்களில் பைக்காரா படகு இல்லம் மூடப்படும் என வனத் துறை அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், உதகையிலிருந்து 22 கிலோமீட்டா் தொலைவில் பைக்காரா படகு இல்லம் அமைந்துள்ளது. பைக்காரா படகு இல்லத்தில் இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டு ஏரியில் படகு சவாரி செய்ய ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா்.
இந்த நிலையில் பைக்காரா படகு இல்லம் உள்ளே செல்வதற்கான ஃபாஸ்ட் டேக் அமைக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமையும் (ஜூலை 22) புதன்கிழமையும் (ஜூலை 23) நடைபெற இருப்பதால் இரண்டு நாள்களுக்கு பைக்காரா சுற்றுலாத் தலம் மூடப்படுவதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.