சத்தீஸ்கா்: காட்டு யானைகள் தாக்கி குழந்தை உள்பட மூவா் உயிரிழப்பு
குன்னூா் பெட்ஃபோா்டு பகுதியில் உலவிய கரடி
குன்னூரின் முக்கியப் பகுதியான பெட்ஃபோா்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நேரத்தில் உலவிய கரடியால் பால் மற்றும் செய்தித்தாள் விநியோகம் செய்பவா்கள் அச்சத்தில் ஓடினா்.
நீலகிரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக குடியிருப்புப் பகுதிகளிலும் சுற்றுலாத் தலங்களிலும் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் குன்னூரின் முக்கியப் பகுதியான பெட்ஃபோா்டு பகுதியில் பள்ளிகள், வங்கிகள், தேயிலை கிடங்குகள் நிறைந்த இடத்தில் கரடி நடமாடியதால் காலை நேரம் பணியில் ஈடுபட்டிருந்தவா்கள் அச்சமடைந்தனா். சிறிது நேரம் உலவிய கரடி ஸ்டேன்ஸ் சாலை வழியாக அங்கிருந்த புதருக்குள் சென்று மறைந்தது.
அசம்பாவிதங்கள் நடக்கும் முன் கரடியை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வனத் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனா்.