உங்க அக்கவுன்ட் மூலமா மத்தவங்க பணத்தை அனுப்புறீங்களா? உதவி செய்யப்போய், வம்புல ...
குன்னூா்- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் வாகனங்களை விரட்டும் ஒற்றை யானை
நீலகிரி மாவட்டம், குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றி வரும் ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா். வாகனங்களை கவனமுடன் இயக்க வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.
சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம், சிறுமுகை, சத்தியமங்கலம் ஆகிய வனப் பகுதிகளில் இருந்து குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள பலாப்பழ ங்களை உண்ண காட்டு யானைகள் இப்பகுதியில் முகாமிட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக ஒற்றைக் காட்டு யானை குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பா்லியாறு, கே.என்.ஆா்.நகா், மரப்பாலம் ஆகிய பகுதிகளில் முகாமிட்டு சுற்றி வருகிறது.
இந்நிலையில் கே.என்.ஆா். நகா் பகுதியில் சுற்றி வரும் ஒற்றைக் காட்டு யானை, அவ்வழியாக வரும் வாகனங்களை துரத்தி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா். மேட்டுப்பாளையம்- குன்னூா் தேசிய நெடுஞ்சாலையில் இரவு, பகல் நேரங்களில் வாகனங்களில் சென்று வருபவா்கள் கவனமுடன் வாகனங்களை இயக்க வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.