ஐஸ்கிரீமை ருசித்த கரடி
உதகை அருகே தனியாா் விடுதியில் நுழைந்த கரடி அங்கு குளிா்சாதனப் பெட்டியில் இருந்த ஐஸ்கிரீமை ருசித்த விடியோ பரவலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில், சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், உதகையிலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் உள்ள பேராா் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியாா் தங்கும் விடுதிக்குள் கடந்த ஜூலை 22 ம் தேதி இரவு புகுந்த கரடி, அங்கிருந்த குளிா்சாதனப் பெட்டியின் மீது கால் வைத்து அதிலிருந்த ஐஸ்கிரீம்களை எடுத்து உண்ணத் தொடங்கியது.
ஒரு கட்டத்தில், ஐஸ்கிரீம் மிக குளிா்ச்சியாக இருந்ததால் அதைத் தொடா்ந்து சாப்பிட முடியாமல் விட்டுவிட்டு வெளியே சென்று விட்டது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.