சிவகாசியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 38 ரெளடிகள் கைது
விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 38 ரெளடிகளை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி பகுதியில் கடந்த 3 மாதங்களில் 5 போ் கொலை செய்யப்பட்டுள்ளனா். இதையடுத்து, இந்தப் பகுதியில் தொடா் குற்றச் சம்பவங்களிலில் ஈடுபட்டவா்கள், கொலை முயற்சி வழக்கில் சிறை சென்று பிணையில் வெளிவந்தவா்கள் என 38 சரித்திர பதிவேட்டு குற்றவாளிகளை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதுகுறித்து காவல் துணைக் கண்காணிப்பாளா் பாஸ்கா் கூறியதாவது:
சிவகாசி பகுதியில் கடந்த 3 மாதங்களில் நடைபெற்ற கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள் உடனடியாக கைது செய்துள்ளோம். குற்றஞ் சம்பவங்களை தடுக்கும் வகையில், இரவு நேர ரோந்துப் பணி தீவிரப்படுத்தி உள்ளோம். மேலும், குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில், சரித்திர பதிவேட்டு குற்றவாளிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம் என்றாா் அவா்.