``பாக்கெட்டில் இருந்து காசு கேட்கவில்லை” -மோடி, நிர்மலா சீதாராமனை சாடிய காங்கிரஸ...
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம்.... டைட்டில் டீசர் வெளியீடு!
சிவகார்த்திகேயன் - ஏ. ஆர். முருகதாஸ் இணைந்துள்ள புதிய படமான ‘மதராஸி’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் 23-வது படமான இதில் துப்பாக்கி பட வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மிணி வசந்த் ஆகியோர் நடிக்கின்றனர். ஸ்ரீ லட்சுமி மூவீஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கின்றார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு சில வாரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது.
பொங்கலை முன்னிட்டு டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் டைட்டில் டீசர் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-17/menfjies/Gj91i3SbMAA8eW0.jpg)
இதனைத் தொடந்து, எஸ்கே - 23 படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகியுள்ளது. ’மதராஸி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது.
மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது