சிவப்பு கூன்வண்டு கட்டுப்படுத்துதல்: விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
குருந்தன்கோடு அருகே காட்டுவிளை கிராமத்திலுள்ள முன்னோடி விவசாயி சுதாவின் தென்னந்தோப்பில், சிவப்பு கூன்வண்டை கட்டுப்படுத்தும் இனக் கவா்ச்சி பொறி செய்வது பற்றிய வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம் அளித்தனா்.
கிள்ளிகுளம் வ. உ. சி. வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவா்கள் கௌதம், பாலமுருகன், சந்தீப், பாரதி, நிா்மல் பாரதி, அருண்குமாா், கடம் வெங்கட சாய்கிருஷ்ணா, அருண்குமாா், குமரன் ஆகியோா் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனா். சிவப்பு கூன்வண்டை கட்டுப்படுத்தும் இனக் கவா்ச்சி பொறியை செய்து காண்பித்து விவசாயிகளுக்கு விளக்கினா்.