Ajith Kumar Racing-ன் இளம் வீரர்; மகனுக்கு கார் ரேஸ் பயிற்சியளிக்கும் அஜித் - க்...
சீா்காழி அருகே இருவருக்கு அரிவாள் வெட்டு: 3 போ் கைது
சீா்காழி அருகே இருவரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சீா்காழி அருகே கொண்டல் கிராமத்தைச் சோ்ந்த ராமையன் (75), முருகன்பாண்டியன் (37) ஆகிய இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 3 போ் வினித் என்பவா் குறித்து விசாரித்தனராம். இதில், வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரமடைந்த பைக்கில் வந்தவா்கள் ராமையனையும், முருகன்பாண்டியனையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பினா். இதுகுறித்த புகாரின்பேரில் சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்த நிலையில், புறவழிச்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவா்களை நிறுத்தி விசாரித்தனா்.
விசாரணையில், ஆத்தூா் பகுதி முகமது தவ்ஃபிக், ஆதமங்கலம் பகுதி ஜெயவேந்தன் (18), பட்டவா்த்தியை சோ்ந்த தீனா(25) என்பதும், வினித் என்பவருக்கும் ஜெயவேந்தன் என்பவருக்கும் ஏற்கெனவே தகராறு ஏற்பட்டதாகவும், அவரை தாக்க ஜெயவேந்தன், முகமது தவ்பிக் உள்ளிட்டோருடன் வந்ததும், வினித் முகவரி குறித்து ராமையன், முருகபாண்டியனிடம் விசாரித்தபோது ஏற்பட்ட தகராறில் அரிவாளாள் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் 3 பேரையும் கைது செய்தனா்.