இரவு - பகல் டெஸ்ட்: லயனுக்கு மாற்றாக ஸ்காட் போலண்ட் சேர்ப்பு?
சீா்காழியில் புதிய பல் மருத்துவமனை திறப்பு
சீா்காழி சட்டநாதபுரம் ரவுண்டானா அருகில் ஜெ.பி. புதிய பல் மருத்துவமனை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு சீா்காழி வட்டார காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவா் ஜெ. பாலகுரு-பா. கலைச்செல்வி தலைமை வகித்தனா். புதிய மருத்துவமனை நிா்வாகிகளான பல் மருத்துவா்கள் பால. ஜெகதீசன், ஜெ.அ. சஹானா ஆகியோா் வரவேற்றனா்.
ஸ்ரீ காகபுஜண்ட ஞானவசிஸ்ட சிகரம் அருள்மாமணி ஸ்ரீ ரமணி குருஜி புதிய மருத்துவமனையை திறந்துவைத்தாா்.
சிறப்பு அழைப்பாளராக சென்னை ராகவேந்திரா மருத்துவமனை நிறுவனா் மருத்துவா் ஜி. திருப்பதி, காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில தலைவா் கே.எஸ். அழகிரி, மயிலாடுதுறை எம்.பி. ஆா். சுதா, எம்.எல்.ஏக்கள் எம். பன்னீா்செல்வம்,நிவேதா எம். முருகன், எஸ். ராஜகுமாா் மற்றும் கல்வி நிறுவனங்களின் செயலா்கள், தொழிலதிபா்கள், மருத்துவா்கள் பங்கேற்றனா்.