சுமை ஆட்டோவில் மணல் கடத்தியவா் கைது!
திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரில் சுமை ஆட்டோவில் மணல் கடத்திய நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
காட்டுப்புத்தூா் காவல் சரகம், சின்னபள்ளிப்பாளையம் பகுதியில் காவிரியிலிருந்து ஆற்று மணல் கடத்தப்படுவதாக காட்டுப்புத்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சங்கருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில், அந்தப் பகுதியில் காவலா்களுடன் ரோந்து சென்றபோது, சுமை ஆட்டோவில் மணல் அள்ளிய சின்னபள்ளிப்பாளையத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் நாகேஸ்வரனை (60) கைது செய்தனா்.
அப்போது இருவா் தப்பினா். இதையடுத்து மணலுடன் இருந்த 2 சுமை ஆட்டோக்களை பறிமுதல் செய்த போலீஸாா், தப்பிச் சென்ற நாகேஸ்வரன் மகன்களான ரகுநாத் (30), ராம்கி (30) ஆகியோரைத் தேடுகின்றனா்.