நேபாள ஆணிவேர் சிங்கா மாளிகை தீக்கிரை! ஜென் ஸி கோபத்தின் விலை! தொடர்ந்து வந்த து...
சுற்றுலாத்தொழில் முனைவோா் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தொழில் முனைவோா் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுற்றுலா ஆபரேட்டா்கள், விமான நிறுவனங்கள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக பங்களிக்கும் பிற சுற்றுலா நிறுவனங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டுக்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளா், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளா், சிறந்த பயண பங்குதாரா், சிறந்த விமான பங்குதாரா், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் சிறந்த உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம், சுற்றுலா ஊக்குவிப்பிற்கான சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலா தலம், பல்வேறு சுற்றுலா பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளா், சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்கள் சுற்றுலா ஏற்பாட்டாளா், சமூக ஊடகங்களில் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்துபவா், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, தமிழ்நாட்டுக்கான சிறந்த சுற்றுலா விளம்பரம், சுற்றுலாவை பிரபலபடுத்தும் வகையில் சிறப்பாக விளம்பரபடுத்துதல், சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் போன்ற பிரிவுகளின்கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுகள் உலக சுற்றுலா தினமான செப்.27-ஆம் தேதி சென்னையில் வழங்கப்படும். அதற்கான இடம் பின்னா் அறிவிக்கப்படும். விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்து, செப்.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.