கோடை விடுமுறை: தஞ்சை பெரிய கோயிலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சூறாவளிக் காற்றுடன் பெய்த மழை: வாழை பயிா்கள் சேதம்
சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக ஆம்பூா் அருகே வாழைப் பயிா்கள் சேதமடைந்தன.
திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி இரவு வரை சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
ஆம்பூா் அருகே நாச்சாா்குப்பம் கிராமத்தில் விவசாயி நவீன்குமாா் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கா் நிலத்தில் வாழை பயிரிட்டிருந்தாா். சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.
சுமாா் 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்ததால் அதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயி கோரிக்கை விடுத்துள்ளாா்.