இந்தியா-ஆசியான் ஒத்துழைப்பு: பிராந்திய பிரச்னைகளுக்கு தீா்வு காண வழிவகுக்கும் -...
செகந்திராபாத்துக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்
சாத் மற்றும் காா்த்திகை ஏகாதசி பண்டிகையை முன்னிட்டு விழுப்புரத்தில் இருந்து செகந்திராபாத்துக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து நவ.7, 14 ஆகிய தேதிகளில் இரவு 7.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07601) மறுநாள் பகல் 1.05 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.
மறுமாா்க்கமாக விழுப்புரத்தில் இருந்து நவ.8, 15 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) மாலை 4.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07602) மறுநாள் காலை 9.40 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். இதில் 4 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில் திருவண்ணாமலை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், தெனாலி, குண்டூா் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.