நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
செப். 22முதல் நெல்லையில் கனரக வாகனங்களுக்கு தடை
திருநெல்வேலி மாநகருக்குள் கனரக வாகனங்கள் நுழைவதற்கு திங்கள்கிழமை (செப்.22) முதல் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு பழையபேட்டையில் உள்ள வாகன முனையம் மற்றும் விற்பனை சந்தை செப். 22ஆம் தேதி முதல் இயங்கவுள்ளது. எனவே, கனரக வாகனங்கள் மற்றும் அனைத்து வகையான லாரிகள் திருநெல்வேலி மாநகராட்சி பகுதிக்குள் வந்து செல்ல தடை விதிக்கப்படுகிறது.
பழையபேட்டை பகுதியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பழைய பேட்டை வாகன முனையத்தில்தான் கனரக வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும். காய்கறிகள் மற்றும் சரக்கு ஏற்றிவரும் அனைத்து கனரக வாகனங்கள், மினி லாரிகள் நகா்ப்புற பகுதிக்குள் வராமல் வாகன முனையத்தில்தான் சரக்குகளை ஏற்றவோ, இறக்கவோ செய்ய வேண்டும். அங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு உரிய கட்டணம் செலுத்தி குத்தகைதாரரிடம் உரிய ரசீது பெற்றுக்கொள்ளவேண்டும்.
டாடா 407, டாடா ஏஸ், அசோக் லெய்லென்ட் தோஸ்த் வாகனங்கள் மட்டும் மாநகராட்சிப் பகுதிக்குள் வந்து செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. இதர வாகனங்கள் மாநகராட்சி பகுதிக்குள் வந்து நின்றால், அபராதம் வசூலிக்கப்படும் எனக் கூறியுள்ளாா்.