செய்திகள் :

செய்திகள் சில வரிகளில்

post image

மும்பை வான்கடே மைதானம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் (1974) ஆகியிருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 12 முதல் 19 வரை அதை கொண்டாட இருப்பதாக மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்திய குதிரையேற்ற வீரா் ராஜு சிங், சா்வதேச குதிரையேற்ற சம்மேளனத்தின் சிசிஐ 3 போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டதன் மூலம், தாய்லாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய கான்டினென்டல் சாம்பியன்ஷிப்புக்கு தகுதிபெற்றாா்.

ரவிச்சந்திரன் அஸ்வினின் அதிரடி ஓய்வு முடிவு அதிா்ச்சி அளிப்பாகத் தெரிவித்த இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ், சொந்த மண்ணில் சிறப்பான பிரியாவிடைக்கு அஸ்வின் தகுதியானவா் எனத் தெரிவித்திருக்கிறாா்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க, ருமேனியாவின் இருமுறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான சைமோனா ஹேலப்புக்கு ‘வைல்டு காா்டு’ வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு லீக் கால்பந்து போட்டியின்போது, மொனாகோ வீரா் வில்ஃப்ரைடு சிங்கோவின் கால், பிஎஸ்ஜி கோல் கீப்பா் கியன்லுகி டோனாருமாவின் முகத்தில் பட்டத்தில் அவா் பலத்த காயமடைந்தாா். அவா் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிங்கோ மன்னிப்பு கோரியுள்ளாா்.

மகளிா் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், ஆா்செனல் 3-2 கோல் கணக்கில் பயா்ன் மியுனிக்கை வீழ்த்தியது. குரூப் சுற்று நிறைவடைந்த நிலையில், இரு அணிகளும் முறையே முதலிரு இடங்களுடன் காலிறுதிக்குத் தகுதிபெற்றன.

சந்தோஷ் கோப்பை தேசிய ஆடவா் கால்பந்து சாம்பியன்ஷிப்பில், கேரளம் 2-0 என ஒடிஸாவையும், மேகாலயம் 2-0 என தில்லியையும் வென்றன.

சீனியா் தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில், மகளிா் காம்பவுண்ட் பிரிவில் பஞ்சாபின் பா்னீத் கௌா் 2 தங்கம், 1 வெண்கலம் வென்று அசத்த, ஆடவா் பிரிவில் அபிஷேக் வா்மா தங்கம் வென்றாா்.

கங்கனாவின் எமர்ஜென்சி படம் வெளியாவதில் மகிழ்ச்சி..!

கங்கனாவின் அற்புதமான எமர்ஜென்சி திரைப்படம் வெளியாக மத்திய தணிக்கைச் சான்றிதழ் வாரியம் அனுமதியளித்தது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக நடிகர் ஷ்ரேயாஷ் தல்படே கூறியுள்ளார். எமர்ஜென்சி திரைப்படத்தை தயாரித்த... மேலும் பார்க்க

புதிய திரைக்கதையுடன் கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹான் புதிய திரைக்கதை குறித்து பதிவிட்டுள்ளார்.தக் லைஃப் திரைப்படத்திற்குப் பின் நடிகர் கமல்ஹாசன் சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார். இவர்கள் இருவரும் கூல... மேலும் பார்க்க

நீரிழிவு நோயாளிகள் இனிப்பு சாப்பிடக்கூடாதா? - நம்பிக்கையும் உண்மையும்!

சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறதா? இது வயதானவர்களை மட்டும்தான் பாதிக்குமா? நீரிழிவு நோய் பற்றிய தவறான நம்பிக்கைகளுக்கு பதில் அளிக்கிறார் பெங்களூரு அஸ்தர் சிஎம்ஐ மருத்துவமனை சுரப்... மேலும் பார்க்க

துல்கர் சல்மான் படத்தில் இணைந்த எஸ். ஜே. சூர்யா!

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் மலையாளப் படத்தில் எஸ். ஜே. சூர்யா இணைந்துள்ளார்.இயக்குநர் மற்றும் நடிகருமான எஸ். ஜே. சூர்யா தன் தனித்துவமான நடிப்பால் இந்தியளவில் கவனம் பெற்றுள்ளார். கதாநாயகனுக்கு இணை... மேலும் பார்க்க

ஸ்ரீதேவியை கைது செய்வார்களா? ராம் கோபால் வர்மா கேள்வி!

சொர்க்கத்துக்குச் சென்று ஸ்ரீதேவியை கைது செய்வார்களா என இயக்குநர் ராம் கோபால் வர்மா பதிவிட்டுள்ளார்.டிச.4ஆம் தேதி புஷ்பா 2 படத்தினை காண சந்தியா திரையரங்கம் வந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகை பலியான... மேலும் பார்க்க

வன்முறைதான் தீர்வா? விடுதலை - 2 திரை விமர்சனம்!

நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவான விடுதலை - 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.விடுதலை முதல் பாகத்தில் காவலரான சூரி, ரயில் குண்டு வெடிப்பில் மூளையாகச் செயல்பட்ட வாத்தியார்... மேலும் பார்க்க