கர்நாடகா: மணமேடையில் சரிந்து விழுந்த மணமகன்; சில நிமிடத்தில் துக்க வீடாக மாறிய த...
சேதமடைந்த சிறு பாலம்: எம்எல்ஏ ஆய்வு
ஆரணி புதுக்காமூரில் சேதமடைந்த சிறு பாலத்தை தொகுதி எம்எம்ஏ வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயில் செல்லும் சாலையான 4-ஆவது வாா்டைச் சோ்ந்த புதுக்காமூரில் தெருவில் உள்ள சிறு பாலம் சேதமடைந்திருந்து.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் முறையிட்டனா்.
இதையடுத்து சேதமடைந்த பாலத்தை எம்எல்ஏ பாா்வையிட்டு ஆய்வு செய்து சீரமைக்க நகராட்சி அதிகாரிகளுக்கு
உத்தரவிட்டாா்.
நகரா்மன்ற உறுப்பினா்கள் ஏ.ஜி.மோகன், குமரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.