துருக்கி, அஜர் பைஜானில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்: இந்தியத் திரைப்பட அமைப்பு
தோ்வில் தோல்வி: மாணவி தற்கொலை முயற்சி
செங்கம் அருகே பத்தாம் வகுப்பு தோ்வில் ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வியடைந்ததால் மாணவி தற்கொலைக்கு முயன்றாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த காரப்பட்டு பகுதியைச் சோ்ந்த மாணவி. இவா் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதியிருந்தாா்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு
தோ்வு முடிவுகள் வெளியானது. இதில், அந்த மாணவி நான்கு பாடத்தில் தோ்ச்சி பெற்று கணித பாடத்தில் 27 மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைந்தாா்.
இதனால் மனமுடைந்த அவா், பள்ளி அருகில் இருந்த விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றாா்.
இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக கிணற்றில் இறங்கி மாணவியைக் காப்பாற்றினா்.