41வது நாளாக உண்ணாவிரதம்: விவசாய சங்கத் தலைவரின் உடல்நிலை கடும் பாதிப்பு!
சேதமடைந்த சிறுபாலங்களில் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே சேதமடைந்த சிறுபாலங்களை மாவட்ட நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மையில் பெய்த பலத்த மழையால் சிறுபாலங்கள் சில சேதமடைந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நீப்பத்துறை, பக்கிரிபாளையம், அரட்டவாடி, தாழையூத்து, காஞ்சி பகுதியில் சேதமடைந்த சிறுபாலங்களை மாவட்ட நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் ஞானவேல் நேரில் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது பேசிய அவா், செங்கம் பகுதிகளில் பழுதடைந்துள்ள சிறுபாலங்கள் அனைத்தும் விரைவில் சீரமைக்கப்படும் என தெரிவித்தாா்.
இந்த ஆய்வின் போது, செங்கம் உள்கோட்டப் பொறியாளா் கோவிந்தசாமி, உதவி பொறியாளா் பிரீத்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.