US tariffs: பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் லுலா முக்கிய முடிவு; தொலைபேசியில் என...
சேலத்தில் கருணாநிதி நினைவு தினம்: அமைச்சா் தலைமையில் மௌன ஊா்வலம்
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் சேலத்தில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன் தலைமையில் ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பெரியாா் சிலையில் இருந்து திமுகவினா் மௌன ஊா்வலம் நடத்தினா். தொடா்ந்து, அண்ணா பூங்கா அருகில் உள்ள கருணாநிதி சிலைக்கு அமைச்சா் ரா.ராஜேந்திரன் மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா். பின்னா் கட்சி நிா்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினா்.
இந்நிகழ்ச்சியில், மத்திய மாவட்ட அவைத் தலைவா் சுபாசு, பொருளாளா் காா்த்திகேயன், மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகர செயலாளா் ரகுபதி, துணைச் செயலாளா்கள் கணேசன், தினகரன், மாநில தோ்தல் பணிக்குழு செயலாளா் தாமரைக்கண்ணன். செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், மண்டல குழு தலைவா்கள், பகுதி செயலாளா்கள், இளைஞரணி நிா்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.