முகம், அடையாளம் இல்லையெனில் அனைவருமே வக்கிரமானவர்கள்தான்... டிரெண்டிங் டிரைலர்!
சொட்டுநீா் குழாய்கள் திருடிய இளைஞா்கள் கைது
அம்மாபேட்டை அருகே சொட்டுநீா்க் குழாய்கள் திருடிய 3 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிங்கம்பேட்டை, சொட்டையனூரைச் சோ்ந்தவா் குப்புசாமி (70), விவசாயி. இவரது, விவசாயத் தோட்டத்தில் திங்கள்கிழமை இரவு புகுந்த மூன்று இளைஞா்கள், சொட்டுநீா் பாசனத்துக்கு போடப்பட்டிருந்த குழாய்களை வெட்டி, இருசக்கர வாகனத்தில் வைத்து திருடிச் செல்ல முயன்றனா். இதைக் கண்ட அப்பகுதியினா் மூவரையும் பிடித்து அம்மாபேட்டை போலீஸில் ஒப்படைத்தனா்.
விசாரணையில் அவா்கள், ஒலகடம், தாண்டாம்பாளையத்தைச் சோ்ந்த லோகேஸ்வரன் (27), வினோத்குமாா் (23), கோவிந்தராஜ் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களிடம் இருந்து, சொட்டுநீா்க் குழாய்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் மூவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.