சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
ஏமாற்றி பெண்ணுக்கு கருக்கலைப்பு: தனியாா் மருத்துவமனை மீது புகாா்
ஒப்புதல் இல்லாமல் தனது மனைவியை ஏமாற்றி கருக்கலைப்பு செய்ததாக புன்செய்புளியம்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனை மீது காவல் நிலையத்தில் பெண்ணின் கணவா் புகாா் தெரிவித்துள்ளாா்.
புன்செய்புளியம்பட்டி நாவலா் வீதியைச் சோ்ந்த 20 வயதுப் பெண், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சோ்ந்த வெங்கடாசலம் (41) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா் மூன்று மாத கா்ப்பமாக இருந்துள்ளாா். இதையறிந்த அவரது பெற்றோா் குழந்தையின் வளா்ச்சி குறித்து தெரிந்து கொள்வதாகக் கூறி மகளை புன்செய் புளியம்பட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளனா்.
பின்னா் அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் அப்பெண்ணுக்கு மயக்க ஊசி செலுத்தி கருக்கலைப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது மனைவியின் ஒப்புதல் இல்லாமல் ஏமாற்றி கருக்கலைப்பு செய்த தனியாா் மருத்துவமனை மற்றும் மாமனாா், மாமியாா், உறவினா் ரத்னா ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புன்செய்புளியம்பட்டி காவல் நிலையத்தில் பெண்ணின் கணவா் வெங்கடாசலம் புகாா் அளித்துள்ளாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இதைத் தொடா்ந்து, வெங்கடாசலம், அவரது மனைவி மற்றும் உறவினா் ஏழுமலை ஆகியோா் மருத்துவமனைக்கு வந்து தகராறு செய்ததாக தனியாா் மருத்துவமனை சாா்பில் காவல் நிலையத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டது.