சோளிங்கா் லட்சுமி நரசிம்மா் கோயில் தொட்டாச்சாரியாா் உற்சவம் நிறைவு
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் தொட்டாச்சாரியாா் உற்சவம் நிறைவு நாள் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி பக்தோசிப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சுவாமி, தொட்டாச்சாரியாா் சுவாமிக்கு சிறப்பு பூஜை அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் நடைபெற்றன. மங்கள வாத்தியங்கள் முழங்க சுவாமி தனி தனி கேடயத்தில் எழுந்தருளி மாட வீதியில் உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தனா். வீடு தோறும் கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபட்டனா். பத்துக்கு மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.