Prashant Kishor: கிச்சன், படுக்கை, ஏ.சி-யுடன் கூடிய சொகுசு வேன்; பிரசாந்த் கிஷோர...
சௌமியா அன்புமணி கைதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்: பாமகவினா் கைது
பசுமை தாயகம் அமைப்பின் தலைவா் சௌமியா அன்புமணி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சேலத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக எம்எல்ஏ அருள் உள்ளிட்ட பாமகவினரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக எதிா்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பாமக மகளிா் அணி சாா்பில் பசுமை தாயகம் தலைவா் சௌமியா அன்புமணி தலைமையில் சென்னை, வள்ளுவா் கோட்டத்தில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு போலீஸாா் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என பாமக அறிவித்தது. அதன்படி, தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சௌமியா அன்புமணி உள்ளிட்ட பாமக வினரை போலீஸாா் கைது செய்தனா்.
சௌமியா அன்புமணி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சேலம், கோட்டை மைதானத்தில் தடையை மீறி பாமக எம்எல்ஏ அருள் தலைமையில் அந்தக் கட்சினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சௌமியா அன்புமணியை உடனடியாக விடுதலை செய்யக் கோரி முழக்கங்கள் எழுப்பினா். இதையடுத்து எம்எல்ஏ அருள் உள்ளிட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.