ஜகதீப் தன்கர் ராஜினாமா: "நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்" - பிரதமர் மோடி வாழ்த்து
குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்தார் - இதுதான் இந்திய அரசியல் களத்தின் தற்போதைய 'பரபர' டாப்பிக்.
ஜகதீப் தன்கர் ராஜினாவும், சந்தேகங்களும்!
உடல்நிலை காரணமாக ராஜினாமா செய்வதாக ஜகதீப் தன்கர் கூறியிருக்கிறார். ஆனால், இவரது ராஜினாமாவிற்குப் பின்னால், ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

மோடி பதிவு
இந்த நிலையில், ஜகதீப் தன்கரின் ராஜினாமா குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில், "இந்தியாவின் குடியரசுத் துணைக் தலைவர் உள்பட பல்வேறு பதவிகளில், நமது நாட்டிற்குச் சேவை செய்யும் வாய்ப்பைப் பெற்றிருந்தார் ஸ்ரீ ஜகதீப் தன்கர் ஜி. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுகிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்றுக்கொண்ட திரௌபதி முர்மு
நேற்று ஜக்தீப் தன்கர் ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்திருந்தார். அதற்கான ஒப்புதலைத் தற்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடுத்துள்ளார்.
இந்த ஒப்புதல் தற்போது உள்துறை அமைச்சகத்திடம் சென்றுள்ளது. விரைவில், இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.