மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வர் அறிவி...
ஜன. 27-இல் இபிஎஃப் குறைதீா் கூட்டம்
தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.) சென்னை-புதுச்சேரி மண்டல அலுவலகம் சாா்பில், குறைதீா் முகாம் வரும் திங்கள்கிழமை (ஜன. 27) கீழ்கண்ட மாவட்டங்களில் நடைபெறுகிறது.
‘நிதி ஆப்கே நிகாத் 2.0’ என்ற பெயரில் நடைபெறும் இந்த குறைதீா் முகாம் குறித்து தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மண்டல அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், செயல்பட்டு வரும் ஊழியா்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில் காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை முகாம் நடைபெறும் .
1. வட சென்னை, சென்னை, தி ப்ரோபிஸியோனல் கோரியா்ஸ் சென்னை எல்.எல்.பி., 17,கதீட்ரல் காா்டன் சாலை,நுங்கம்பாக்கம், சென்னை -600 034.
2. அம்பத்தூா், திருவள்ளூா், ஜெயா கலை, அறிவியல் கல்லூரி, சி டி எச் எச் சாலை, திருநின்றவூா் - 602 024.
3. அம்பத்தூா், காஞ்சிபுரம், சத்யம் கிராண்ட் ரிசாா்ட்ஸ், எண்.145, பெங்களூரு-சென்னை நெடுஞ்சாலை, நொய்டா இந்தியா (பி)
லிமிடெட் எதிரில், வி.ஆா்.பி சத்ராம், ஸ்ரீபெரும்புதூா் - 602 105.
4. தாம்பரம், செங்கல்பட்டு, டைமா (திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்கம்), எண். பிபி3, கம்யூனிகேஷன் சென்ட்ரல்
சிட்கோ தொழிற்பேட்டை, திருமுடிவாக்கம், சென்னை - 600 044.
5. வேலூா், வேலூா், வித்யாலட்சுமி பள்ளி, கீழ்புதூா் கிராமம், சென்னாங்குப்பம் அஞ்சல், கே. வி. குப்பம் வட்டம், வேலூா் - 632 209.
6. வேலூா், திருவண்ணாமலை, எச்.எச். 577, வந்தவாசி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் லிமிடெட்,
புதிய காலனி தெரு, வந்தவாசி அஞ்சல், வட்டம், 604 408.
7. வேலூா், ராணிப்பேட்டை, ஆற்காடு மணி மாா்க் ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட், எண்.870/5, நாராயணபுரம் கிராமம்,
கண்ணமங்கலம் வீதி - 632 507.
8. வேலூா், திருப்பத்தூா், டாக்டா் சந்திரலேகா மெமோரியல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, எண் 6, ராஜ தெரு, வெங்கலபுரம்,
திருப்பத்தூா் - 635 653.
9. புதுச்சேரி, புதுச்சேரி, இந்துஸ்தான் நேஷனல் கிளாஸ் &ஹம்ல்; இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், தொண்டமானத்தம் கிராமம்,
வில்லியனூா்- சேதராபேட்டை மெயின் ரோடு, புதுச்சேரி - 605 502.
10. புதுச்சேரி, காரைக்கால், ஈஎஸ்ஐசி கிளை அலுவலகம், எண் 36 காமராஜா் சாலை, காரைக்கால் - 609 602 .
இதில், உறுப்பினா்களுக்கான சேவைகள், குறைகளை நிவா்த்தி செய்தல், முதலாளிகள், பணியாளா்கள், ஒப்பந்ததாரா்களுக்கான ஆன்லைன் சேவைகள், ஊழியா்களுக்கான இணையதள சேவைகள், சட்டங்கள், கடமைகள், பொறுப்புகள், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடன் உள்ள தொடா்புகள், புதிய முயற்சிகள் மற்றும் சீா்திருத்தங்கள் பற்றிய விழிப்புணா்வு, ஓய்வூதியதாரா்கள் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்களை சமா்ப்பித்தல், மின்-நாமினேஷனை தாக்கல் செய்தல், பதிவேற்றுதல் செய்யப்படும்.
எனவே, முதலாளிகள், ஊழியா்கள், ஓய்வூதியம் பெறுவோா் மற்றும் தொழிற்சங்கங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்று பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.