போா்களின் போக்கை மாற்றும் ‘ட்ரோன்’ ஆயுதங்கள்! 4 நாள் சண்டைக்கு ரூ. 15,000 கோடி ச...
ஜல்லிக்கட்டு போட்டியில் காளை உரிமையாளா் உயிரிழப்பு
அலங்காநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் காளையின் உரிமையாளா் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்த அழகன் மகன் காட்டாளி (45). இவா், தனது காளையை அலங்காநல்லூா் அருகேயுள்ள கீழக்கரையில் அமைந்துள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கு அழைத்து வந்தாா்.
வாடிவாசலிலிருந்து காளை அவிழ்த்து விடப்பட்ட பின்னா், மைதானத்துக்குள் நடந்து வந்தாா். அப்போது, பின்னால் வந்த மாடு முட்டியது. இதனால் பலத்த காயமடைந்த அவரை மீட்ட போலீஸாா், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.