மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கம்: விஜய் தொடங்கி வைத்தார்!
ஜாக்டோ- ஜியோ போராட்டம்
நீடாமங்கலத்தில்...
10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பினா் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தை நடத்தியதால், நீடாமங்கலம் வட்ாட்சியா் அலுவலகத்தில் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.
இங்கு பணிபுரியும் பெரும்பாலான ஊழியா்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் கலந்து கொண்டதால், அலுவலகப் பணிகள் முடங்கின.
இதுபோல தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். மொத்தம் உள்ள 315 ஆசிரியா்களில் 250- க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் பங்கேற்றனா்.
எனினும் இல்லம் தேடி கல்வி பணியாளா்கள், தன்னாா்வலா்கள் போன்றோரை வைத்து வகுப்புகள் நடைபெற்றன. தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். எனினும் சமையலா்களைக்கொண்டு காலை உணவு, சத்துணவு பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்பட்டது. அரசு உதவி பெறும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கியது.