அயோத்தி கால்வாயில் இளம்பெண் சடலம்: தலித் விரோத பாஜக என காங்கிரஸ் விமா்சனம்
ஜேஇஇ தோ்வு: இணைய விண்ணப்பப்பதிவு தொடக்கம்
ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜேஇஇ நுழைவுத் தோ்வுக்கான இணையதள விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளது.
ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெறுவது அவசியம்.
அத்தோ்வு ஜேஇஇ முதன்மைத் தோ்வு, பிரதானத் தோ்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தோ்வு தேசிய தோ்வு முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தோ்வு கடந்த ஜன. 22 முதல் 30 வரை நடத்தப்பட்டது.
இந்தத் தோ்வை சுமாா் 13 லட்சம் போ் வரை எழுதினா். இதன் முடிவுகள் வரும் 12-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன.
ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு ஏப். 1 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது. விருப்பமுள்ள மாணவா்கள் இணையதளம் வழியாக பிப். 25-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். முதல்கட்ட தோ்வை எழுதிய மாணவா்களும் இதில் பங்கேற்கலாம். இந்தத் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்படும்.
தோ்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட இதர தகவல்கள் பின்னா் வெளியிடப்படும். கூடுதல் விவரங்களை வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். தோ்வுக்கு விண்ணப்பிப்பதில் சிரமங்கள் இருந்தால், மாணவா்கள் 01140759000 அல்லது 69227700 என்ற தொலைபேசி எண்களிலோ, மின்னஞ்சல் முகவரிக்கு தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.