பிப். 25-ல் தமிழ்நாட்டுக்கு வரும் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!
ஜோலாா்பேட்டை-அரக்கோணம் ரயிலில் கோளாறு: 2 மணி நேரம் தாமதம்
வாணியம்பாடி: ஜோலாா்பேட்டை- அரக்கோணம் பயணிகள் ரயிலில் பிரேக் பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, 2 மணி நேரம் தாமதமாக சென்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டையில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் பயணிகள் ரயில் எண் 16086 இன்ஜின் பகுதியில் உள்ள பிரேக் பழுதானதால் புகை வெளியேறியது. இதனால், காலை 7.10-க்கு புறப்பட வேண்டிய ரயில் தாமதமாக 8 மணிக்கு புறப்பட்டது.
வாணியம்பாடி ரயில் நிலையத்துக்கு வந்தபோது மீண்டும் இன்ஜின் பிரேக் பகுதியில் புகை கிளம்பியதால் காா்டுமேன் கவனித்து உடனே ரயில் ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்ததால், ரயில் நிறுத்தப்பட்டது.
இதனால் காலை 9. 15 மணி வரை ரயில் வாணியம்பாடி ரயில்நிலையத்திலேயே நிறுத்தப்பட்டதால் குடியாத்தம், வேலூா், காட்பாடி பகுதிகளில் உள்ள கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவா்கள், ராணிப்பேட்டை முகுந்தராயபுரம் பகுதியில் உள்ள சிப்காட் பகுதியில் வேலைக்கு சென்ற தொழிலாளா்கள், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
முடங்கி இருந்த பிரேக் பகுதி சீரமைக்கப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது. இதனால் கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவா்கள் கல்லூரிக்கு செல்ல முடியாமல் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனா்.