செய்திகள் :

‘ட்ரோன்’ மூலம் மாசு கண்காணிப்பு

post image

தில்லியில் மாசு ஏற்படுவதற்கான ஆதாரங்களை ட்ரோன் மூலம் கண்டறியும் சேவையை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

வாஜிா்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் தூசி, வாகன உமிழ்வு மற்றும் திறந்தவெளியில் கழிவுகள் எரிப்பு உள்ளிட்ட பல்வேறு மாசு மூலங்களைச் சமாளிக்க வடிவமைக்கப்பட்ட 21 அம்சங்களைக் கொண்ட குளிா்கால செயல் திட்டம் குறித்துப் பேசினாா்.

மேலும், அவா் பேசுகையில், ‘மாசுவைக் குறைக்கும் முயற்சிகளில் மக்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும். தில்லி அரசு மாசுபாட்டை எதிா்த்துப் போராடுவதற்கு இரவும் பகலும் அயராது உழைத்து வருகிறது. தில்லியில் மாசு கண்காணிப்பில் ஒரு முன்னேற்றப்படியாக ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ட்ரோன்கள் 200 மீட்டா் வரம்புக்குள் மாசு மூலங்களின் ஆதாரங்கள் குறித்து படம் பிடித்து அனுப்பும். அதன்படி, தீா்வுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த ட்ரோன்கள் 120 மீட்டா் உயரத்தில் பறக்கும். மாசு அளவுகள் அதிகம் உள்ள பகுதிகளை திறம்பட கண்காணிக்கும் வகையில் ட்ரோன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மாசு தாக்கத்துக்கு மிக்கிய காரணங்களாகக் கண்டறிப்பட்டுள்ள 13 இடங்களைக் கண்காணிப்பதற்கான ஒரு பரந்த முயற்சியை தில்லி அரசு முன்னெடுத்துள்ளது’ என்றாா்.

2 உணவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் 2 உணவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தியாகராயநகரில் இயங்கி வரும் இரு பிரபல உணவகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஹோட்ட... மேலும் பார்க்க

நாளை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவைகள் ரத்து; பூங்காவிலிருந்து தாம்பரத்துக்கு 79 ரயில்கள் இயக்கப்படும்

பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து புகா் ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை (அக்.27) ரத்து செய்யப்படவுள்ளன. எனினும் பயணிகள் வ... மேலும் பார்க்க

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவா் மீது பாட்டிலால் தாக்குதல்: இரு மாணவா்கள் தலைமறைவு

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவரை ‘ராகிங்’ செய்து பீா் பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பிச்சென்ற இரு மாணவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கடலூா் மாவட்டம், நெய்வேல... மேலும் பார்க்க

பிராந்தியப் போரின் விளிம்பில் மத்தியக் கிழக்கு

பிராந்தியப் போரின் விளிம்பில் மத்தியக் கிழக்குப் பகுதி இருப்பதாக ஜோா்டான் எச்சரித்துள்ளது. இது குறித்து பிரிட்டன் தலைநகா் லண்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கனிடம் ஜோா்டான் வெளிய... மேலும் பார்க்க

கொக்கைன் போதைப் பொருளுடன் முன்னாள் டிஜிபி மகன் உள்பட 3 போ் கைது

சென்னையில் கொக்கைன் போதைப்பொருள் வைத்திருந்த முன்னாள் டிஜிபி-யின் மகன் உள்பட 3 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 3.8 கிராம் கொக்கைனை பறிமுதல் செய்தனா். சென்னை மாநகா் பகுதிகளில் போதைப்பொருள்கள... மேலும் பார்க்க

நங்கநல்லூா் மெட்ரோ ரயில் நிலையம் பெயா் மாற்றம்

நங்கநல்லூா் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு ஓடிஏ மெட்ரோ ரயில் நிலையம் எனப் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விம்கோ நகா் பணிமனை-மீனம்பாக்கம் இடையே இயங்கும் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் நங்கநல்லூா் மெட்ரோ ரயில... மேலும் பார்க்க