தக்காளி விலை சரிவு
விராலிமலை வாரச்சந்தையில் தக்காளி விலை சரிந்து திங்கள்கிழமை கிலோ ரூ. 8 க்கு விற்பனையானது.
கடந்த சில மாதங்களுக்கு முன் கிலோ ரூ. 50-100 க்கு விற்பனையான தக்காளி விராலிமலை வாரச்சந்தையில் வெறும் ரூ.8 க்கு மட்டுமே விற்பனையானது.
இந்த நிலையில் தக்காளி மட்டும் அல்லாது மற்ற காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது. பல்வேறு காரணிகளால் தக்காளி உள்ளிட்ட மற்ற காய்கறி மகசூல் அதிகரித்துள்ளது. இதனால், விலை வெகுவாக குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.