இந்தியா-அமெரிக்கா விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை
தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செவ்வாய்க்கிழமை) சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.72,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் கடந்த ஜூலை 5-இல் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.72,480-க்கு விற்பனையானது.
தொடர்ந்து, வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.9,010-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.72,080-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 8) கிராமுக்கு ரூ. 50 உயர்ந்து ரூ. 9,060-க்கும் சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ. 72,480-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை தொடா்ந்து 4- ஆவது நாளாக எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.120-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
The price of gold jewelry in Chennai rose by Rs. 400 per sovereign today (Tuesday) and is being sold at Rs. 72,480.
இதையும் படிக்க: அலட்சியத்தின் உச்சம்..! கடலூர் பள்ளி வேன் விபத்தில் ரயில் கேட் கீப்பருக்கு சரமாரி தாக்கு!