சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 15 வெளிநாட்டவர் கைது! நாடுகடத்த நடவடிக்கை!
தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (மே. 2) பவுனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 70,040-க்கும் விற்பனையாகிறது.
கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில்,
தங்கத்தின் விலை தொழிலாளர் நாளான வியாழக்கிழமை (மே. 1) ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.1,640 குறைந்து ரூ.70,200-க்கும் விற்பனையானது.
சரியும் சிவகாசி பட்டாசுகளின் விற்பனை
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ.8,775-க்கும் , பவுனுக்கு ரூ. 160 குறைந்து ரூ.70,040-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்
அதேநேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து ரூ.109-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,000 உயா்ந்து ரூ. 1,09,000-க்கும் விற்பனையாகிறது.