தங்கம் விலை மீண்டும் உயர்வு; இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வாரத்தின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை மீண்டும் உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.63,920-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை ரூ.800 குறைந்து ரூ.63,120-க்கு விற்பனையானது.
தில்லி நெரிசல் சம்பவம் எதிரொலி: ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள்!
இந்த நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.400 குறைந்து கிராம் ரூ. 7,940-க்கும், ஒரு சவரன் ரூ. 63,520-க்கும் விற்பனையானது. இன்று காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7970-க்கும், சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ.63,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது
வெள்ளியில் விலை தொடர்ந்து 5-வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 108.00-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,08,000-க்கும் விற்பனையாகிறது.
தரையிறங்கும் போது தலைகீழாக கவிழ்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானம்: 17 பேர் காயம்!