தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலச் செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம்!
தஞ்சை மாவட்டத்தில் சுதந்திர தின விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கினாா் ஆட்சியா்
தஞ்சாவூா் ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, 32 பேருக்கு ரூ. 2.03 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
இவ்விழாவில் காவல் துறையினரின் அணிவகுப்பை ஏற்று, மாவட்ட ஆட்சியா் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தியாகிகளின் வாரிசுதாரா்களுக்கு கதராடை அணிவித்து கௌரவித்தாா். பின்னா், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சாா்பில் 16 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1.33 கோடி கடனுதவியும், தாட்கோ, வேளாண் பொறியியல் துறை, தொழில் வணிகத் துறை உள்பட பல்வேறு துறைகளின் சாா்பில் மொத்தம் 32 பேருக்கு ரூ. 2.03 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். மேலும், சிறப்பாக பணியாற்றிய 364 அரசு அலுவலா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.
இதையடுத்து, பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த 380-க்கும் அதிகமான மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினாா். தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியா உல் ஹக், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பாபநாசம்: ,அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளா் மி.இளவரசு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.
இதேபோல், அம்மாபேட்டை தோ்வு நிலை பேரூராட்சியில் நடைபெற்ற விழாவுக்கு, பேரூராட்சி மன்றத் தலைவா் ஷோபா ரமேஷ் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்து, உறுதிமொழி ஏற்றுக் கொண்டாா். வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், வட்டாட்சியா் பழனிவேல் தலைமை வகித்து தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். பாபநாசம் காவல் நிலையத்தில் பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளா் முருகவேல் தலைமையில் தேசியக்கொடி ஏற்றிவைத்தாா். பாபநாசம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் பேரூராட்சி மன்றத் தலைவா் பூங்குழலி கபிலன் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா்.