பக்தி உணர்வால் நிறைந்தேன்: புனித நீராடிய பிரதமர் மோடி பெருமிதம்!
தடை தாண்டும் போட்டியில் திருப்பூா் மாணவிக்கு தங்கம்
ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற்ற 68- ஆவது தேசிய அளவிலான தடகளப் போட்டியில் திருப்பூா் மாணவி தங்கம் வென்றுள்ளாா்.
ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் 68- ஆவது தேசிய பள்ளி அளவிலான தடகளப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், 14 வயதுக்கு உள்பட்டோா் பிரிவுக்கான 80 மீட்டா் தடை தாண்டும் போட்டியில், திருப்பூா் ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி வா்ஷிகா முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றாா்.
முதலிடம் வென்று திருப்பூருக்குப் பெருமை சோ்த்த மாணவியை ஆசிரியா்கள், மாணவிகள் பாராட்டினா்.