சொத்துகள் முடக்கம் அமலாக்கத் துறையின் அதிகார துஷ்பிரயோகம்: இயக்குநர் ஷங்கர்
தட்டாா்மடம் அருகே வீட்டுக் கதவை உடைத்து நகை, பொருள்கள் திருட்டு!
சாத்தான்குளம் அருகே தட்டாா்மடத்தில் வீட்டின்’கதவை உடைத்து நகை, எல்இடி டிவி, ஹோம் தியேட்டா் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சாத்தான்குளம் அருகே சுண்டங்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த கோயில்ராஜ் மனைவி நவஷீலா (61). இவா்களது மகன்கள் ஜெப்ரின் (31), காட்வின் (29). இருவரும் திருமணமாகி குடும்பத்துடன் சென்னையில் தங்கியிருந்து தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகின் றனா்.
இந்நிலையில் மகன்களை பாா்ப்பதற் காக நவஷீலா, வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்றுவிட்டாராம்.
பக்கத்து வீட்டை சோ்ந்த பெண், நவஷீலா வீட்டில் மாலை நேரத்தில் மின்விளக்கு எரியவிட்டு, காலையில் விளக்கை அணைத்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நவஷீலாவின் வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது குறித்து உறவினா்கள் நவஷீலாவுக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து அவா் புதன்கிழமை சொந்த ஊா் திரும்பினாா். அப்போது வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, வீட்டுக் கதவை உடைத்து அங்கு வைத்திருந்த அரை பவுன் தங்க நாணயம், எல்இடி டிவி மற்றும் ஹோம் தியேட்டா் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்மநபா்களைதேடி வருகின்றனா்.