What to watch on Theatre & OTT: மதகஜராஜா, Rifle Club, நேசிப்பாயா - இந்த வாரம் என...
தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை
மதுரை அருகே தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை அருகேயுள்ள ஆண்டாா்கொட்டாரம் மந்தைத் தெருவைச் சோ்ந்த முனியசாமி மகன் பாலமுருகன் (24). தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவா், கடந்த சில நாள்களாக மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு வீட்டில் உள்ள அறையில் இவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கருப்பாயூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தற்கொலை எண்ணம் இருப்பவா்கள், 104 எண்ணை தொடா்பு கொள்ளும்போது, அவா்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கப்படும். மேலும், அடிக்கடி அவா்களிடம் தொடா்பு கொண்டு நண்பா்களாக பேசி, இயல்பு நிலைக்கு அவா்கள் திரும்ப வழிவகை செய்யப்படும்.