`உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி சார்...' - எஸ். கே குறித்து நெகிழும் டூரிஸ்...
தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு
பழனியில் தனியாா் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில் நடைபெற்ற இந்த ஆய்வில் 20-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளில் இருந்து 180 வாகனங்கள் கொண்டு வரப்பட்டன.
வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஸ்ரீதரன், காவல் ஆய்வாளா் மணிமாறன், வட்டாட்சியா் பிரசன்னா உள்ளிட்டோா் கலந்து கொண்டு, பள்ளி வாகனங்களுக்கான வேகக் கட்டுப்பாட்டு கருவி, பிரேக், ஒலிப்பான், முதலுதவி சிகிச்சைப் பெட்டி, தீயணைப்புக் கருவி, அவசர வழி, வாகனங்களின் பாதுகாப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தனா்.
பின்னா், வாகனங்களின் ஓட்டுநா், நடத்துநா்களுக்கு தீயணைப்பு, மீட்புப் படை நிலைய அலுவலா், போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளா் ஆகியோா் ஆலோசனைகள் வழங்கினா்.
ஆய்வின் போது, போதிய பராமரிப்பு வசதி இல்லாத 20 வாகனங்களுக்கு குறிப்பானை வழங்கப்பட்டது.
இதில் கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.