`உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி சார்...' - எஸ். கே குறித்து நெகிழும் டூரிஸ்...
பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம்!
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், அறிவியல், பொறியியல் உள்ளிட்ட பல்துறைகளில் சாதனை படைத்தவா்களுக்கு வழங்கப்படும் பத்ம விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், அறிவியல் , பொறியியல் தளங்களில் சிறப்பான சாதனைபுரிந்தவா்களுக்கு 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுக்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம். விருதுக்கான விண்ணப்பப் படிவம், இதர முக்கிய விவரங்கள் அதற்கான இணையதள முகவரியில் வெளியிடப்பட்டிருக்கிறது.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணைய வழியில் வருகிற 31-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், அசல் கருத்துருவை மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண் 88, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திண்டுக்கல் என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.