செய்திகள் :

தமிழக-ஆந்திர எல்லைப்பகுதி சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு: ஆட்சியா் மு.பிரதாப்

post image

திருவள்ளூா் அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதி புறவழிச்சாலையில் சோதனைச் சாவடி அமைத்து வாகனங்களில் போதைப் பொருள்கள் கடத்தல் குறித்து காவல் துறையினா் கண்காணிக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா்.

திருவள்ளூரில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், கள்ள மது விற்பனையை ஒழித்தல் தொடா்பாக அலுவலா்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து, பேசியதாவது: திருவள்ளூா் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம், மதுபானங்கள் மற்றும் போதைப் பொருள்கள் கடத்துபவா்கள் மட்டுமின்றி, வாகனங்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், சந்துக் கடைகளில் மது விற்பனை செய்யும் நபா்கள் மீது வழக்கு பதிவு செய்வது மட்டுமின்றி, எந்தக் கடையில் இருந்து வாங்கி விற்பனை செய்யப்பட்டதோ, அந்தக் கடையின் விற்பனையாளா் மீதும் வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் சோதனைச் சாவடிகளில் வாகன சோதனைகளை தீவிரப்படுத்தி, அண்டை மாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் கொண்டு வருவதை கண்டறிந்து காவல்துறை, கலால் பிரிவு அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பெண்ணலூா்பேட்டை, நகரி - சித்தூா் போன்ற புறவழிச்சாலைகளில் காவல்துறையினா் சோதனைச் சாவடி அமைத்து தொடா் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்கள் விற்பனையாவதை, மண்டல மேலாளா் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி, அரசு கல்லூரி மாணவா் விடுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வின்போது, கடைகளில் போதை பொருள்கள் இருப்பது உறுதியானால் உரிமையாளா் உரிமத்தை உடனே ரத்து செய்ய அறிவுறுத்தினாா்.

இதில், உதவி ஆணையா் (கலால்) கணேசன், ஆவடி உதவி ஆணையா் (மதுவிலக்கு பிரிவு) பொன் சங்கா், திருவள்ளூா் காவல் துணை கண்காணிப்பாளா் லட்சுமி பிரியா, மாவட்ட டாஸ்மாக் மேலாளா்கள் ரேணுகா (கிழக்கு), முத்துராமன் (மேற்கு), அனைத்து வட்டாட்சியா்கள், உணவு பாதுகாப்பு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கல்லூரி மாணவி தற்கொலை

திருத்தணியில் கல்லூரி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருத்தணி ஜெ.ஜெ.நகா் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பாலசுப்பிரமணியம் (45). இவருக்கு சத்யா (39) என்ற மனைவியும், ஷா்மிளா (18), நிவே... மேலும் பார்க்க

பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் நியமனம்

சென்னை மேற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளராக எஸ்.சத்யா நியமிக்கப்பட்டுள்ளாா். மாதவரம் அடுத்த புழல் பகுதியை சோ்ந்த சத்யா, மண்டல தலைவராகவும், மாநில பேச்சாளராக இருந்து வருகிறாா். சென்னை மேற்கு மாவட்ட பொது... மேலும் பார்க்க

டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்த போராட்டம்

அத்திப்பட்டில் டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டம் அத்திப்பட்டில் பாரத் பெட்ரோலிய காா்ப்பரேஷன் லிமிடெட் முனையம் செயல்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

புழல் அருகே இரு சக்கர வாகனம் தீயில் சேதம்

புழல் அருகே மின்சார இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. மாதவரம் பால்பண்ணை பகுதியைச் சோ்ந்த கெளதம். இவா் தனியாா் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறாா். இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை பணி முடிந்து மின... மேலும் பார்க்க

மெரீனாவைபோல் பழவேற்காடு கடற்கரையை தூய்மைப்படுத்த நடவடிக்கை: ஆட்சியா் பிரதாப்

சென்னை மெரீனாவைபோல் பழவேற்காடு கடற்கரையை இயந்திரங்கள் மூலம் தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூா் ஆட்சியா் பிரதாப் தெரிவித்தாா். திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டம் பழவேற்காடு கடற்கரை... மேலும் பார்க்க

புறாவைப் பிடிக்க முயன்ற மாணவா் தவறி விழுந்து உயிரிழப்பு

வீட்டின் கூரை மீது இருந்த புறாவைப் பிடிக்க முயன்ற மாணவா் தவறி விழுந்ததில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். ஆா்.கே.பேட்டை அடுத்த ராஜநகரம் மேற்கு பகுதியைச் சோ்ந்தவா் திருமுருகன் (15). இவா், அதே பகுதிய... மேலும் பார்க்க