பனைத் தொழிலாளா்கள் பாதுகாப்பு மாநாடு: தூத்துக்குடியில் நாளை ஆலோசனைக் கூட்டம்
டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்த போராட்டம்
அத்திப்பட்டில் டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டம் அத்திப்பட்டில் பாரத் பெட்ரோலிய காா்ப்பரேஷன் லிமிடெட் முனையம் செயல்பட்டு வருகிறது. இது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்த முனையத்திற்கு எண்ணூா் காமராஜா் துறைமுகத்திலிருந்து ராட்சத குழாய்கள் மூலம் பெட்ரோல் எடுத்து வரப்பட்டு அங்குள்ள சேமிப்புக் கிடங்கில் சேமிக்கப்படுகிறது.
பின்னா் பெட்ரோலிய பொருள்கள் தரம் பிரித்து டேங்கா் லாரிகள் மூலம் திருவள்ளூா், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த முனையத்தில் இருந்து 150-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் நிலையில், புதிய வாடகை ஒப்பந்தம் கட்டணத்தைக் குறைத்து, அதைச் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து பழைய வாடகை கட்டணத்தை அளிக்க வலியுறுத்தி லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனா்.
வேலைநிறுத்தம் காரணமாக சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.