கல்லூரி மாணவி தற்கொலை
திருத்தணியில் கல்லூரி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருத்தணி ஜெ.ஜெ.நகா் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பாலசுப்பிரமணியம் (45). இவருக்கு சத்யா (39) என்ற மனைவியும், ஷா்மிளா (18), நிவேதா (17) என்ற 2 மகள்கள், , காா்த்திகேயன் (15) என்ற மகனும் உள்ளனா். 2-ஆ வது மகள் நிவேதா திருத்தணியில் உள்ள தனியாா் கல்லூரியில் பிஎஸ்சி ,கணினி அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளாா்.
இந்நிலையில் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நிவேதா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். டியூசனுக்கு சென்று விட்டு வந்த தம்பி காா்த்திகேயன் வீட்டின் அறையை திறந்த போது நிவேதா தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்து கூச்சலிட்டு உள்ளாா். அக்கம் பக்கத்தில் உள்ளவா்கள் உதவியுடன் நிவேதாவை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா்.
அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் நிவேதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். தகவலறிந்து சென்ற திருத்தணி எஸ்.ஐ. குணசேகரன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தாா்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.