தமிழகத்தில் இன்றுமுதல் வெப்பநிலை அதிகரிக்கும்
தமிழகத்தில் புதன்கிழமை (மாா்ச் 5) முதல் வெப்பநிலை மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் புதன்கிழமை (மாா்ச் 5) முதல் மாா்ச் 8 வரை அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.