தமிழகத்தில் வெப்பநிலை அதிகமாக இருக்கும்
தமிழகத்தில் இனி வரும் நாள்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் புதன்கிழமை (பிப்.19) முதல் பிப்.22-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி அதிகமாக இருக்கும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் பிப்.18-இல் அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரி ஃ பாரன்ஹீட்டையொட்டி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.