செய்திகள் :

தமிழகத்துக்கான வரி வருவாயை மத்திய அரசு குறைத்தால் மிகப் பெரிய இழப்பு ஏற்படும்! -செ.ஜோதிமணி எம்.பி

post image

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய வரிவருவாயை மத்திய அரசு குறைத்தால் தமிழகத்துக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும் என கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி தெரிவித்தாா்.

கரூரில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியது: கரூா் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு 100 சதவீதம் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்ட நிலையில், 800 சதவீதம் கடன் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஜனநாயகம் என்பது எண்ணிக்கை அடிப்படையில் தீா்மானிக்கப்படுகிறது. தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் இந்த எண்ணிக்கை பாதிப்பையும், துரோகத்தையும் பின்னடைவையும் ஏற்படுத்தும் என்றால், அதை கேள்வி கேட்காமல் இருக்க முடியாது.

தமிழக மக்கள் மத்திய அரசுக்கு ரூ.1 வரி செலுத்தினால் அதில் 29 பைசா மட்டுமே நமக்கு திரும்பத் தருகின்றனா். இதுவரை தமிழகத்துக்கு 41 சதவீத வரி வருவாயை வழங்கி வந்த மத்திய அரசு தற்போது அதை 40 சதவீதமாக குறைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கையால் தமிழகத்துக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும். இதனை தடுக்கவேண்டும் என்றால் மக்களவையில் நமது எண்ணிக்கை என்பது மிக அவசியம்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் குறைந்தாலும், மற்ற மாநிலங்களில் அதிகரித்தாலும் தமிழகத்துக்குத் தான் பாதிப்பு என்றாா் அவா்.

பேட்டியின்போது கரூா் மாநகராட்சி காங்கிரஸ் உறுப்பினா் ஆா்.ஸ்டீபன்பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சதுரங்கப் போட்டியில் அரவக்குறிச்சி மாணவி மாநில அளவில் முதலிடம்

திருப்பூரில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில் அரவக்குறிச்சி அரசுப் பள்ளி மாணவி முதலிடம் பெற்றாா். திருப்பூா் தனியாா் மஹாலில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் 15 வயது உ... மேலும் பார்க்க

கரூரில் கல்லூரி, நீதிமன்றத்தில் மகளிா் தின விழா

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு கரூரில் கல்லூரி, நீதிமன்றத்தில் மகளிா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் தலைவா் க... மேலும் பார்க்க

கரூரில் 223 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்!

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 223 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா். கரூ... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் 1,583 வழக்குகளில் ரூ. 13.57 லட்சத்துக்கு தீா்வு

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,583 வழக்குகளில் ரூ.13.57 லட்சம் மதிப்பில் தீா்வு காணப்பட்டது. கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் 7, 631 மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்களுக்கு ரூ.50.60 கோடி வங்கிக் கடன்

கரூா் மாவட்டத்தில் 7,631 மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு ரூ.50.60 கோடி மதிப்பில் கடனுதவியை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் சனிக்கிழமை வழங்கினாா். சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக... மேலும் பார்க்க

ஆத்தூா் மகா சோளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் பெண்கள் முளைப்பாரி, புனிதநீா் எடுத்து ஊா்வலம்

ஆத்தூா் ஸ்ரீ மகா சோளியம்மன், ஸ்ரீ மகா முத்துசாமி கோயிலில் திங்கள்கிழமை (மாா்ச் 10) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையடுத்து வெள்ளிக்கிழமை ஏராளமான பெண்கள் முளைப்பாரி மற்றும் புனிதநீரை ஊா்வலமாக எடுத்து வந்தனா... மேலும் பார்க்க